கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
முட்டையை பச்சையாக உடைத்து குடிக்கலாமா.? குடிக்க கூடாதா.?
மனிதர்கள் அனைவருக்கும் முட்டை ஒரு சிறந்த உணவாக உள்ளது. ஒரு முட்டையின் எடையில் சுமார் 60% வெள்ளைக்கருவும் 30 சதவீதம் மஞ்சள் கருவும் உள்ளது. இதில் வெள்ளைக் கருவில் 90 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது. 10 சதவீதம் புரதம் உள்ளது. வெள்ளை கருவில் கொழுப்பு இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.
ஆனால், சிலர் முட்டையை வேக வைக்காமல் பச்சையாக குடித்தால் உடலுக்கு அதிகச்சத்து கிடைக்கும் என்று கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள், உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்றோர் அதிக சக்தியை பெறுவதற்காக பச்சை முட்டையை குறிக்கின்றனர். இதனால், எந்த வித சக்தியும் கிடைக்காது ஆபத்து தான் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அந்த வகையில் பச்சை முட்டையின் வெள்ளை கருவில் உள்ள அவிடின் எனும் புரதச்சத்து உள்ளது. இது முட்டையில் உள்ள பயாட்டின் எனும் வைட்டமினுடன் சேரும்போது, பயாட்டின் சத்து சிறுகுடலில் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் முட்டையை வேக வைத்தால் அந்த வெப்பத்தில் அவிடின் அழிந்துவிடும்.
அதன் காரணமாக முட்டையில் உள்ள பயோட்டின் முழுமையாக உடலில் சேரும். அவிட்டின் சத்தை விட பயோட்டின் சத்து தான் உடலுக்கு மிகவும் தேவை. குறிப்பாக கூந்தல் வளர்ச்சிக்கு இது முக்கிய பங்கு வைக்கிறது. எனவே வேகவைத்த முட்டையை சாப்பிடுவது தான் நல்லது.