மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. இந்த பொருள்லாம் ஃப்ரீஸரில் வச்சு யூஸ் பண்றிங்களா?.. உயிருக்கே உலைவைக்கும் அபாயம்..!!
இன்றளவில் பலரும் அத்தியாவசிய பொருட்களை அதிகமாக வாங்கி வீட்டில் சேமித்துவைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவை கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பிரிட்ஜிலும், அதில் இருக்கும் பிரீசர்களிலும் அடுக்கிவைக்கிறார்கள். ஏனெனில் சாதாரணமாக ஃப்ரிட்ஜில் இருக்கும் குளிர்ச்சிதன்மையை விட, பிரீசரில் இருக்கும் குளிர்ச்சிதன்மை அதிகமாகவே இருக்கும் என்பதால் விரைவில் பொருட்கள் கெட்டுப்போகாது என்பது பலரின் எண்ணமாகும்.
ஆனால் அனைத்து பொருட்களையும் ப்ரீசரில் வைக்கக்கூடாது. பால் மற்றும் பால்சார்ந்த பொருட்கள் விரைவில் கெட்டுவிடும் என்பதால், அதனை பிரீஸரில் வைப்பது மிகவும் தவறானது. ஏனெனில் அவை குளிர்ந்து உறைந்துபோய்விடும். பாலை அதில்வைத்து எடுத்து காய்ச்சினால், உருகி பாலில் உள்ள சத்துக்கள் போய்விடும். அதுபோன்று பழங்களையும் ஃப்ரீசரில் வைக்கக்கூடாது. அப்படி வைப்பதால் ஊட்டச்சத்து மதிப்பு குறைந்து, சுவையும் மாறிவிடும்.
உலர் பழவகைகளை வேண்டுமெனில் ஃப்ரீசரில் வைக்கலாம். தக்காளி மற்றும் மிளகாய் போன்ற சாஸ் வகைகளையும் பிரீசரில் வைக்கக்கூடாது. அதில் கலந்திருக்கும் மூலப்பொருட்கள் தனித்தனியாக பிரிந்துவிடும். அத்துடன் பாக்கெட்டில் இருந்து எடுத்து பயன்படுத்திய காபிதூளை ப்ரீசரில் வைப்பதால் மனமும், சுவையும் குறைந்துவிடும். உபயோகிக்காத காபிதூளை 2 வாரம் பிரீஸரில் வைத்து பயன்படுத்தலாம்.
மேலும் வெள்ளரிக்காய், கீரை வகைகள், காலிஃப்ளவர், குடைமிளகாய் போன்றவற்றை ப்ரீசரில் வைப்பதன் மூலம் அதிலுள்ள நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள், ஊட்டச்சத்து, சுவை போன்றவை மாறிவிடும். வெள்ளரிக்காயை கண்களுக்கு பயன்படுத்துவதாக இருந்தால் மட்டும் ப்ரீசரில் வைத்து பயன்படுத்தலாம். அது போன்று வறுத்த உணவு, தானியங்களை ஃப்ரீசரில் வைக்கக்கூடாது. அதன் மொறுமொறுதன்மை, சுவை குறைந்துவிடும்.
சிலசமயம் வெகுநாட்களுக்கு பொருட்களை பதப்படுத்தி பிரீஸரில் வைப்பதால் உயிருக்கே ஆபத்து உண்டாகும். ஏனெனில், சத்துக்கள் குறைந்து ரசாயன மூலக்கூறுகள் தனித்தனியே பிரிவதால் இதுபோன்ற சில சம்பவங்களும் நிகழ்வது உண்டு. எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் மிகவும் அவசியமானதாகும்.