அட தினமும் சோம்பு பால் குடிப்பதால் நம் உடலில் இவ்வளவு நன்மைகள் ஏற்படுகிறதா..!



Drinking aniseed milk every day has so many benefits in our body..!

அன்றாடம் நம் சமையல் செய்யும் பொருட்களில் சோம்பு இன்றையமையாத ஒன்றாக திகழ்கிறது. இந்த சோம்பானது உடலுக்கு நன்மை பயக்க கூடிய ஒன்றாகும். அதிலும் குறிப்பாக சோம்பு பால் குடிப்பதன் மூலம் நம் உடலில் ஏராளமான நன்மைகள் உண்டாகின்றன.

சோம்பு பால் செய்முறை :  ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர் இதனை வேறு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு இதில் சுவைக்கேற்ப சிறிதளவு நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம்.

Aniseed milk

இந்த சோம்பு பாலை பருகுவதன் மூலம் நம் உடலில் செரிமான கோளாறுகளை சரி செய்து செரிமானத்தை மேம்படுத்துவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த சோம்பு பால் எண்ணெய் இரைப்பை நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த சோம்பு பாலில் கால்சியம், மாங்கனீசு,மெக்னீசியம் ஆகியவை உள்ளதால் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை வகிக்கிறது.

மேலும் இந்த சோம்பு பாலானது பெண்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சனையான இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்கிறது. அதோடு சோம்புவில் இரும்பு மற்றும் பொட்டாசியம் அதிக அளவு காணப்படுவதால் சத்து குறைபாட்டிற்கு நல்ல தீர்வாக அமைகிறது.