மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுவர்களின் சிறுநீரில் முட்டை வேகுமா.!? சீனர்களின் புது ஐட்டம்.! வாருங்கள் பார்க்கலாம்.!
சீனர்கள் உணவு பழக்கங்களில் எந்த ஒரு ஏற்றத்தாழ்வும் இல்லை என்கிறார்கள். அவர்களுக்கு பிடித்த உணவை சாப்பிடுகிறார்கள். இதை எப்படி அருவருப்பாக எடுத்துக்கொள்ள முடியும் என்று பலரின் கேள்வியாக இருந்து வருகிறது. சிறுநீரில் வேகவைத்த முட்டையா.? அதை எப்படி சாப்பிடுகிறார்கள்? வாருங்கள் பார்க்கலாம்.!
சீனாவில் இப்படி வேக வைத்த முட்டையை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். அங்கு உள்ள பிரபலமான உணவுகளில் இதுவும் ஒன்று. முட்டையை வைத்து ஆம்லெட், ஆப் ஆயில் மற்றும் கலக்கி போன்ற பல விதமாக செய்து சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால் சிறுநீரில் வேகவைத்த முட்டை என்பது ஒரு புது விதமான ஐட்டம் என்றே சொல்லலாம்.
'விர்ஜின் பாய்ஸ் எக்' என்ற வேகவைத்த முட்டையை சீனர்கள் மட்டும் ஏன் அதிகம் சாப்பிட விரும்புகிறார்கள்.? ஆசிய நாடுகளில் ஒன்றான சீனாவில் வசிக்கும் மக்கள் மத்தியில் சில வினோத பழக்க வழக்கங்கள் உள்ளன. நம் நாட்டில் எப்படி "உணவே மருந்து" என்று உணவிற்கு சிறப்பிடம் கொடுக்கிறோமோ அதே போல தான் சீனர்களும் அவர்கள் உணவு பழக்கங்களில் ஒன்றான சிறுநீரில் வேக வைத்த முட்டைக்கு சிறப்பிடம் அளிக்கிறார்கள்.
பொதுவாக சீனர்கள் பறப்பது, ஓடுவது, நடப்பது போன்ற உயிரினங்களையும், நாம் அருவருப்பாக, பார்த்தாலே பயப்படக்கூடிய உயிரினங்களையும் சாப்பிடுவது பழக்கம். அந்த வகையில் "விர்ஜின் பாய்ஸ் எக்ஸ்" என்பது பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் யூரினில் முட்டையை ஊறவைத்து பின் அந்த சிறுநீரிலே வேகவைத்து சாப்பிடுவார்கள். வசந்தகாலமான பிப்ரவரி-ஏப்ரல் மாதங்களில் தான் இந்த உணவை சீனர்கள் விரும்பி உண்ணுகிறார்கள்.
முட்டையை வேக வைக்கத் தேவையான சிறுநீரை அங்குள்ள பள்ளியின் மாணவர்களிடம் பக்கெட் மூலம் சேகரித்து மக்கள் கடைக்கு அனுப்புகிறார்களாம். முதலில் முட்டையை சிறுநீரில் ஊறவைத்து பின் வேக வைத்து மறுபடியும் அதே சிறுநீரில் சில மணி நேரம் ஊற வைத்து தயார்படுத்துகிறார்களாம். இப்படி வேக வைத்த முட்டையை சாப்பிடும் போது மூட்டில் வலி ஏற்படாமல் இருக்கவும், வெப்பதாக்கம் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறதாம்.