வாவ்!! சுட சுட ஓட்டல் சுவையில் முட்டை கொத்து பரோட்டா செய்வது எப்படி?? இதோ ஈஸியான வழி..



egg-kothu-parotta-tips

நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்தாமன உணவுகளில் ஒன்று பரோட்டா. அதிலும் கொத்து பரோட்டா என்றால் பலருக்கும் பிடிக்கும். இந்த கொத்து பரோட்டாவை வீட்டிலையே எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. பரோட்டா 4 

2. முட்டை 2

3. பெரிய வெங்காயம் 2 (பெரியது)

4. தக்காளி 2 (நடுத்தரமானது)

5. முந்திரிப் பருப்பு 8 

6.மிளகு, சீரகப் பொடி 1 ஸ்பூன்

7. கரம் மசாலாப் பொடி 1 ஸ்பூன்

8. உப்பு – தேவையான அளவு

9. கொத்தமல்லி இலை

10. கறிவேப்பிலை 

11. பரோட்டா சால்னா தேவையான அளவு

தாளிக்க தேவையான  பொருட்கள் :

1. நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

2. சீரகம் – 1/2 ஸ்பூன்

முட்டை கொத்து பரோட்டா செய்முறை: 

முதலில் சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலையை அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் பரோட்டாவையும் மிகவும் சிறிதாக பிய்த்துக் வைத்து கொள்ள வேண்டும். பிறகு   வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் அதனுடன் கறிவேப்பிலை மற்றும் முந்திரியைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். நன்றாக  வதங்கியதும்  அதனுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு மசிந்ததும் மிளகு, சீரகப் பொடியைச் சேர்த்து ஒருநிமிடம் வதக்கி அதனுடன் கரம் மசாலாப் பொடியைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

அதன் பின்னர் இரண்டு முட்டைகளை உடைத்து கலவையில் ஊற்றி நன்கு கிளறவும். முட்டை சுருண்டதும் அதில் 3 குழிக்கரண்டி அளவு பரோட்டா சால்னாவைச் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு 2 நிமிடங்கள் கழித்து பிய்த்து வைத்துள்ள பரோட்டாக்களை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். சால்னாக் கலவை பரோட்டாத் துண்டுகளுடன் சேர்ந்து நன்கு சுருண்டதும் கொத்தமல்லி இலையை தூவி இறக்கி விட்டால் சுவையான முட்டை கொத்து பரோட்டா தயார்.