மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காலாவதியான உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா?
உணவுப் பொருட்கள் காலாவதியாகிவிட்டால் அது எவ்வளவு பெரிய மதிப்புடைய பொருளாக இருந்தாலும் அதனை சாப்பிடக்கூடாது. அதனையும் மீறி சாப்பிடுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுவாக உணவுப் பொருட்களை வாங்கும் போது காலாவதி தேதி கடந்து விட்டதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். காலாவதி தேதி இருந்தாலும் அதை நாம் ஃப்ரிட்ஜில் நீண்ட நாட்கள் வைத்திருந்தாலும் நாம் உணவுப் பொருளை பயன்படுத்தும் போது காலாவதி தேதி இருக்கிறதா என்பதை கவனித்து சாப்பிட வேண்டும்.
உலர்ந்த நிலையில் உள்ள நட்ஸ் போன்றவை காலாவதி தேதியை கடந்து இருந்தாலும் பார்க்க நன்றாகத் தான் இருக்கும். ஆனால் அதில் கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைகள் இருக்கும் என்பதால் காலாவதியான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக காலாவதியான பொருட்களை சாப்பிடுவதால் வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, மயக்கம் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை கொடுக்கும். எனவே காலாவதியான உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.