3 நாட்கள் கெடாத சுவையான கடப்பா சட்னி..! நாவை நாட்டியமாடவைக்கும் சட்னியை வீட்டிலேயே செய்வது எப்படி?..!!



Famous kadappa chutney recipe

இட்லி மற்றும் தோசைக்கு நாம் சாம்பார், சட்னி, காரப்பொடிகள் போன்றவற்றை பயன்படுத்தி சாப்பிடுவோம். இதில் பெரும்பாலும் சட்னி என்பது ஒரு நேரத்திற்கு அல்லது ஒரு நாளுக்கு மட்டுமே உபயோகம் செய்யும் வகையில் இருக்கும். 

ஆனால் கடப்பா சட்னி இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கப்படும். இன்று அதனை செய்வது எப்படி என காணலாம்.

தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் - 150 கிராம்

தக்காளி - 4 

காய்ந்தமிளகாய் - 24 

பூண்டு - 12 பல் 

கடுகு - சிறிதளவு 

பெருங்காயத்தூள் - சிறிதளவு

கருவேப்பிலை - தேவையான அளவு

எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு 

புளி - ஆட்காட்டி விரல் அளவு

சமையல் குறிப்பு

செய்முறை :

★முதலில் எடுத்துக்கொண்ட சின்னவெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோலுரித்து வைக்க வேண்டும். பின்னர் தக்காளியை பொடியாக நறுக்க வேண்டும். 

★அடுத்து மிக்ஸி ஜாரில் வெங்காயம், மிளகாய் பூண்டு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

★பின்னர் அதே ஜாரில் தனியாக தக்காளி மற்றும் புளியையும் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து வெங்காய கலவையை போடவேண்டும். 

★இதன் பச்சை வாசனை போகும்வரை வதக்கிவிட்டு பின்னர் தக்காளி பேஸ்ட் சேர்த்து அதனையும் வதக்க வேண்டும்.

★பின்னர் சட்னியில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான கடப்பா சட்னி தயார்.