மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரவில் தூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருதா? உங்களுக்கு இந்த நோய்யாக இருக்கலாம்.
தூக்கம் நமது உடலுக்கு மிகவும் தேவையான ஓன்று. ஒவ்வொரு மனிதனும் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தடை இல்லாமல் தூங்க வேண்டும். சரியான தூக்கம் இல்லாததால் நமது உடலில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகிறது. குறிப்பாக மன அழுத்தம், உடல் பருமன் போன்றவை இதில் அடங்கும்.
நீங்கள் உறங்க ஆரம்பித்த பிறகு எந்த ஒரு தடையும் இல்லாமல் உறங்க வேண்டும். அப்போதுதான் உங்கள் மனதும், உடலும் புத்துணர்ச்சி அடையும். தூங்கும் போது நடுவில் எழுந்து எழுந்து தூங்குவது சரியான பழக்கம் அல்ல. நம்மில் பலர் தூக்கத்தின் நடுவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்வது வழக்கம்.
பொதுவாக இரவில் தூங்குவதற்கு முன்பு அதிகமாக நீர் அருந்துவதால் இரவில் அடிக்கடி சிறுநீர் வரும். அல்லது, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரவில் அடிக்கடி சிறுநீர் வரலாம். அதேபோல், புரோஸ்ட்ரேட் விரிவாக்க நோய்யாக இருந்தால் கூட இதுபோன்று இரவில் அடிக்கடி சிறுநீர் வரலாம்.
எனவே இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள் தூங்குவதற்கு முன் அதிகம் தண்ணீர் குடிப்பதை நிறுத்தி பாருங்கள். அப்பாவும் இந்த பிரச்சனை சரியாகவில்லை என்றால் உடனே மருத்துவரை பார்ப்பது சிறந்தது.