3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
பிரிட்ஜில் இருக்கும் குளிர்ந்த நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? - உச்சகட்ட உடல்நல பாதிப்பு அபாயம்.!
நமது தின வாழ்க்கையில் தண்ணீர் இன்றியமையாத ஒன்று. மனிதனின் தேவைக்கு அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பலருக்கும் தண்ணீர் குறைவாக குடிக்கும் பழக்கம் இருக்கும். அதே வெயில் காலம் வந்துவிட்டால் குளிர்ந்த நீரை எவ்வளவு கொடுத்தாலும் குடித்துக் கொண்டே இருப்பார்கள்.
நமது தாகத்தை தீர்க்க அவ்வப்போது பிரிட்ஜில் இருக்கும் நீரை எடுத்து அப்படியே குடிப்போம். ஆனால் நாம் குளிர்ந்த நீரை வெயில் காலத்தில் நேரடியாக குடிப்பது விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும். நாம் குளிர்ந்த நீரை நேரடியாக குடிப்பதால் இதயத்திற்கு செல்லும் நரம்பு மண்டலங்கள் பாதிப்படைந்து இதயத்துடிப்பு குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால் ஐஸ் தண்ணீரை குடித்த சில நிமிடங்களிலேயே மீண்டும் தாகம் ஏற்படும். நரம்பு மண்டலம் உடல் சூட்டை தணிக்க நமது உடலில் இருக்கும் நீரை உறிஞ்சி நீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. இதனால் குளிர்ந்த நீரை விட சாதாரண நீரை குடிப்பது நல்லது.