#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெண் குழந்தைக்கு இந்த பெயர் வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்.! இனி குழப்பமே வேண்டாம்.. நச் என்ற பெயர்கள் இதோ.!
பெண் குழந்தைகள் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருபவர்கள். பொதுவாக அப்பாக்களுக்கு பெண் குழந்தையை தான் அதிகம் பிடிக்கும். காரணம், அந்த குழந்தையின் உருவத்தில் தன் தாயை எண்ணிப் பார்ப்பார்கள்.
மேலும், பெண் குழந்தைகளுக்கு அவர்கள் தந்தை தான் காதநாயகன். இவ்வாறு அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளி தரும் பெண் குழந்தைகளுக்கு என்ன பெயர் சூட்டுவது என்று இந்த பதிவில் காணலாம்.
வெற்றியை வழங்கும் பெண் குழந்தை பெயர்கள் :
லட்சுமி :
இது நம் வணங்கும் பெண் தெய்வத்தின் பெயர். லாபங்களை அள்ளி தரும் பெயர். பல வெற்றிகளை பெறுவாள் என பொருள். இந்த பெயர் கொண்டு இருக்கும் பெண் குழந்தை வீடு செழிப்பாகவும், வளமாகவும் அமையும் எனக் கூறுவார்கள்.
வேதிகா :
இந்த பெயர் அறிவு மற்றும் ஞானத்தைக் குறிக்கும். தனது அறிவு திறன் கொண்டு அனைவர் மனதிலும் இடம் பிடிப்பார்கள். இவர்களின் கல்வி திறன் சிறப்பாக இருக்கும்.
யாஷாஷ்வி :
எடுத்த செயலில் விடா முயற்சி செய்து வெற்றி பெருபவர் எனக் குறிக்கிறது. இவர்களின் வாழ்க்கை சுகமானதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். நேர்மையான வழியில் செல்வத்தை ஈட்டுவார்கள்.
ரிதிமா :
இந்த பெயர் அன்பு மற்றும் இரக்கம் குணம் உடையவள் எனப் பொருள்படும். செல்வம் மற்றும் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது.மேலும், இசை ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பிரிஷா :
பிரிஷா செல்வச்செழிப்பைக் குறிக்கிறது. தெய்வம் வழங்கிய பரிசு என பொருள்படும்.பல சாதனைகளை செய்து அனைவர் மனதிலும் தனி இடம் பிடிப்பார்.
நியாதி :
புனித காவியமான மாகாபாரதத்தில் நிலையான வரிசையைக் குறிக்கும். படைக்கும் கடவுளான பிரம்ம தேவரின் அவையில் அமர்ந்திருக்கும் பெண் தெய்வத்தின் பெயர் ஆகும். செல்வம் மட்டும் அமைதியின் அடையாளம்.
சரிதா :
சரிதா என்ற பெயர் நல்லது எனப் பொருள்படும். சரியான,நேர்மையான வழியில் சென்று நினைத்ததை முடிப்பார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
அன்வி :
இந்த பெயர் காட்டில் உள்ள பெண் தெய்வத்தின் பெயர். தைரியம், தன்னம்பிக்கை நிறைந்து இருப்பார்கள். வெற்றியைப் பெறுவார்கள்.
சைந்தவி :
சைந்தவி என்ற பெயர் அமைதி குணத்தைக் குறிக்கும். நிதானமாகவும், பொறுமையுடனும் இருந்து நினைத்த காரியத்தில் வெற்றியை பெறுவார்கள்.
இனியா :
இந்த பெயர் இன்பத்தை தருபவள் என பொருள். இவர்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. மேலும், கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
இந்த மாதிரி வித்தியாசமாக அர்த்தம் உள்ள பெயர்களை பெண் குழந்தைகளுக்கு வைக்கலாம்.