தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.. அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா..?
தங்கத்தை பொறுத்தவரை இந்தியா கலாச்சார ரீதியாக முக்கியத்துவம வாய்ந்த ஒரு உலோகமாக கருதப்படுகிறது. மேலும் இந்திய மக்கள் தங்கத்தை விலைமதிப்பற்ற ஒன்றாக கருதி அதனை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் சமீப காலமாக தங்கத்தின் விலை ஏறுமுகத்தை கண்ட நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி தங்கத்தின் இன்றைய விலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூபாய் 232 குறைந்து கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5,686க்கும் ஒரு சவரன் 45,488க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூபாய் 1.20 குறைந்துள்ளது. அதாவது ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 77க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 77ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.