ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
பொதுவாக தயிர் சாப்பிடுவதால் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் தயிர் ஒரு சிறந்த புரோபயாடிக். எனவே தயிர் சாப்பிடுவது வயிற்று ஆரோக்கியத்திற்கு நல்ல பலன் கொடுக்கும். அதேபோல் சரும பிரச்சனைகளுக்கும் நல்ல பலனளிக்கிறது.
எனவே தயிர் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். தயிரில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி2 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே தயிர் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் மற்ற நோய்கள் ஏற்படுவதை எதிர்த்து போராடும் வலிமையை கொடுக்கிறது.
ஆனால், பலரும் குளிர்காலத்தில் தயிர் சாப்பிட்டால் உடல் நலக் கோளாறு ஏற்படும் என தயங்குகின்றனர். ஆனால் குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல், சோம்பல் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது.
அதேபோல் தயிரில் உள்ள கால்சியம், பொட்டாசியம், மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கும். குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக தயிர் எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதன்படி தோல் புள்ளிகள், ஒவ்வாமை பிரச்சினைகள் மற்றும் வறண்ட சருமம் போன்றவை தடுக்கப்படுகிறது.