தினமும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா?



Health benefits daily ate eggs

பொதுவாக புரத சத்து தேவைக்கான உணவுப் பொருளாக முட்டை உள்ளது. அதன்படி முடி உதிர்வே பிரச்சினை முதல் சரும பாதுகாப்பு வரை உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் முட்டை கொடுக்கிறது.

ஆனால் சிலர் முட்டை அதிக அளவில் சாப்பிடுவதால் கொழுப்பு சேர்ந்து இதய நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர். அதனால் பலரும் முட்டை சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா? என்று குழம்பியுள்ளனர். எனவே முட்டை சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா என்பது குறித்து எந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

eggs

தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளதாக ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு அபாயம் 90% குறைந்துள்ளது. எனவே முட்டை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை தான் கொடுக்கிறது.

முட்டையில் வைட்டமின் பி மற்றும் அயோடின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிலும் குறைந்த விலையில் அதிக சத்துடைய உணவுப் பொருளாக முட்டை உள்ளது. முட்டை ஒரு மல்டி வைட்டமின் உணவு பொருளாகும்.

eggs

எனவே முட்டையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.