#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடடே.! வாழைப்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா.!
வாழைப்பழம் பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமுடியாது. விலை குறைவான பழமும் கூட. நம்மில் நிறைய பேர் தினசரி வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கமாக வைத்துள்ளனர். வாழைப்பழத்தில் நிறைய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
தினமும் 3 வாழைப்பழம் சாப்பிட்டால், ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பாப்போம். தினமும் 3 வாழைப்பழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் குறையும். செரிமான மண்டலத்தை சீராக வைக்க உதவும்.
நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழம் இதயத்தை ஆரோக்கியோமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது இன்சுலின் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. வாழைப்பழத்திலும் வைட்டமின் சி உள்ளது. இது தசைகளைத் தாங்கும் கொலாஜனின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
மேலும் இது ரத்த சோகையை தடுக்கிறது. உடல் எடையை கட்டுப்படுத்துகிறது. மன அழுத்தத்தை குறைக்க இதிலுள்ள மெக்னீசியம் உதவுகிறது. எனவே தினமும் 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்