கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
முழு சத்தும் கிடைக்க வேண்டுமா? முட்டையை இப்படித்தான் சாப்பிட வேண்டும்?
பொதுவாக மனிதர்களின் அசைவ உணவில் முக்கிய பங்கு வகிப்பது முட்டை. இந்த முட்டையை பலரும் ஆம்லெட், ஆஃபாயில் மற்றும் வறுத்து சாப்பிடுகின்றனர். ஆனால் அவித்த முட்டையை சாப்பிட்டால் தான் முழு ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதன்படி, அவித்த முட்டையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். அவித்த முட்டையில் வைட்டமின் பி6 மற்றும் பி12 மற்றும் துத்தநாகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை உதவுகிறது.
அவித்த முட்டை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமில்லாமல், உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை கொடுக்கிறது. இதனால் எலும்புகள் வலுவடைய செய்ய உதவுகிறது.
அவித்த முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகியவை உள்ளதால் கண்களை பாதுகாத்து, கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. சருமத்தில் செலினியம் என்ற பகுதி உள்ளது. அதனை உற்பத்தி செய்ய முட்டை முக்கிய பங்கு வைக்கிறது.
அதேபோல், முட்டையில் உள்ள பயோட்டின் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் முட்டை சாப்பிடுவதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு பிடித்த முட்டை கொடுப்பதால் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது.