திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் மோர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள அந்த காலம் முதல் தற்போது வரை மோர் முக்கிய உணவுப் பொருளாக பயன்படுகிறது. குறிப்பாக காரமான உணவுகளை சாப்பிட்டு பிறகு ஒரு டம்ளர் மோர் குடித்தால் வயிற்று எரிச்சல் குறைந்து குளிர்ச்சி அடையும்.
மோரை சிலர் அமிர்தம் என்றே கூறுகின்றனர். அதற்கு காரணம் நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு தினமும் உணவில் மோர் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் செரிமானத்தையும் எளிதாக்குகிறது.
குறிப்பாக தினசரி உணவில் மோர் சேர்த்துக் கொள்வதால் ஜீரணத்தை எளிதாக்கி உடலை பாதுகாப்பாக வைக்க உதவுகிறது. சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பதால் நெய், ஆலிவ் எண்ணெய் போன்ற உணவு குழாயில் இருந்து கழுவி எடுத்து விடுகிறது.
தினமும் மோர் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதற்கு காரணம் மோரில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது.
மோர் சாப்பிடுவதால் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து இரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. குறிப்பாக உடலில் நீர் வற்றாமல் இருக்க உதவுகிறது. மேலும் தினமும் மோர் குடிப்பதால் தூக்கம் நன்றாக வரும்.