மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நெய் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வீங்களா!? அப்போ இதைப் படிங்க!"
நெய் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் உணவில் நெய்யைக் கலந்து சாப்பிடலாம். இது ஒரு வாசனையான உணவுப் பொருள் ஆகும். மேலும் இது குறித்த ஆரோக்கிய உணவாக ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று கூறுவது உண்மையில்லை. நெய் ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருளாகும். இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் ஏராளமாக உள்ளன. எனவே நெய் பசி உணர்வைத் தடுத்து வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். எனவே உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
தினமும் நெய் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக குளிர் காலத்தில் நெய் சாப்பிடுவது மிகவும் நல்லது. குளிர் காலத்தில் நெய் சேர்த்தால் சளி பிடிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இது உண்மையில்லை.
உண்மையில் சளி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல், அஜீரணம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் குளிர் காலத்தில் அதிகளவு ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் இது உடலுக்கு நல்லதல்ல. அந்த நேரத்தில் தினமும் நெய்யை உணவில் சேர்த்து வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.