செவ்வாழை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகளா?



Health benefits of sevvazhai banana

பொதுவாக வாழைப்பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கிறது. அதிலும் செவ்வாழை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களை கொடுக்கிறது. எனவே, செவ்வாழை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

health tips

செவ்வாழையில் பொட்டாசியம், இரும்பு சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ மற்றும் நார்சத்து போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. இவை உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மைகளை கொடுக்கிறது.

அந்த வகையில் செவ்வாழியில் உள்ள நார் சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இது உடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கிறது. அதேபோல், செவ்வாழியில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

health tips

செவ்வாயில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.

செவ்வாழையில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்பை வலுவாக உதவுகிறது. அதேபோல் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு உதவுகிறது. எனவே செவ்வாழையை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுவது உடலுக்கு நல்லது.