மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெறும் வயிற்றில் தண்ணீருடன் இதனை கலந்து குடித்து பாருங்கள்! ஏராளமான நன்மைகள்!
மனிதனுக்கு தண்ணீர் மிகவும் அத்தியாவசியமான ஓன்று. ஆரோக்கியமான உடலுக்கு அதிகமான தண்ணீர் மிகவும் அவசியம். அதிலும், காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும், தண்ணீருடன் ஒருசில பொருட்களை கலந்து குடிப்பதன் மூலம் மேலும் பல நன்மைகள் கிடைக்கிறது.
1 . தண்ணீர் + ஓமம்:
ஒரு டீஸ் ஸ்பூன் ஓமத்தை ஒரு டம்பளர் தண்ணீருடன் கலந்து இரவு கொதிக்க வைத்து பின்னர் ஊற வைத்து விடியற்காலையில் குடிக்க வேண்டும். இப்படி குடித்து வந்தால் குடிப்பதால் உடலில் உள்ள செரிமான பிரச்சனைகள் சரி செய்யக்கூடியது. மேலும், மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய வலியை போக்கும்.
2 . தண்ணீர் + சீரகம்:
இரவு தூங்கும் முன் சிறிதளவு சீரகத்தை தண்ணீரில் போட்டு ஊறவைத்து காலை எழுந்ததும் குடித்து வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனை தினமும் செய்வது தவறு. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை முயற்சி செய்யலாம்.
3 . தண்ணீர் + வெந்தயம்:
இது பொதுவாக நாம் அனைவரும் அறிந்த ஒரு முறையே. இரவு தூங்கும் முன் சிறிதளவு வெந்தயத்தை நீரில் ஊறவைத்து காலை எழுந்ததும் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய உதவுகிறது.
4 . தண்ணீர் + அருகம்புல்:
சிறிதளவு அருகம்புல் பொடியை நீரில் கலந்தோ அல்லது ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸோ வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேற்றி, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.