53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
"பிரசவத்திற்குப் பின்னான உடல் உபாதைகள்! தீர்வு என்ன?" சொல்கிறார்கள் சுகாதார நிபுணர்கள்!
திருமணமான ஒவ்வொரு பெண்ணும் கடந்து வரும் ஒரு நிகழ்வு தான் 'பிரசவம்'. ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பாக அமைவது தான் பிரசவம். அப்படிப்பட்ட பிரசவத்தின் போதும், அதற்குப் பிறகும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். அப்போது தாங்க முடியாத வலி, உதிரப்போக்கு இவற்றால் உடல் பலவீனமடையும்.
மேலும் பிரசவத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் பிரசவத்திற்குப் பின்னான உடல் உபாதைகளை தடுக்கலாம். அவை என்னென்ன என்று பார்ப்போம்.
கைகளில் சேரும் கிருமிகளை அப்புறப்படுத்த அவ்வப்போது கைகளை ஒழுங்காக கழுவ வேண்டும். இதனால் காய்ச்சல், ஜலதோஷம் போன்றவை வராமல் தடுக்கலாம். பிரசவத்திற்குப்பின் கருப்பையானது கீழே இறங்கி சிறுநீர் பையினை அழுத்தும். எனவே அதிகமாக தண்ணீர் குடித்தால் சிறுநீர்த்தொற்றை தவிர்க்கலாம்.
மேலும் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி சானிடரி நாப்கின்களை மாற்ற வேண்டும். மேலும் மார்பகங்களில் ஏற்படும் தொற்றை தவிர்க்க இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும். மேலும் தளர்வான காட்டன் ஆடைகளையே அணிய வேண்டும்.