மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உஷார்.. உலர்பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு.! அளவாய் சாப்பிடுங்க ஆரோக்கியமாய் இருங்க.!!
உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள் குறித்து விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.
உலர் பழங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அதனை அதிகமாக உட்கொள்வதால் ஆபத்து ஏற்படுகிறது. உலர் பழங்களை அதிகம் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும் என பார்க்கலாம்.
எடை அதிகரிப்பு :
தினமும் 250 கலோரி அளவு உலர் பழங்கள் உட்கொள்வதன் மூலமாக ஒரு மாதத்தில் ஒரு கிலோ உடல் எடை அதிகரிக்கிறது. 2 தேக்கரண்டி ப்ளூபெர்ரி, 2 அத்திப்பழம் மற்றும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவது சுமார் 60 கலோரிகளை வழங்கும். இதனால் சாப்பிடும் அளவு, உலர் பழங்களின் கலோரி அளவை கருத்தில் கொள்ள வேண்டும்.
குடல் பிரச்சனை :
உலர் பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இதனால் குடலின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவது அதிகமாவதால் குடலுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் உலர்ந்த பழங்களை அதிகமாக உட்கொள்வது மலச்சிக்கல், வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு, வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் உலர் பழங்களை குறைவாக உட்கொள்வது தான் குடலுக்கும், உடலுக்கும் மிகவும் நல்லது.
பற்சிதைவு :
உலர் பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் இயற்கையான சர்க்கரையானது இருக்கிறது. இதனால் உலர்ந்த பழங்களை அதிகம் சாப்பிடுவது சர்க்கரையை அதிகரித்து பற்சிதைவை ஏற்படுத்தும். மேலும் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டதால், பல் சார்ந்த பிரச்சினைகள் உருவாகும்.
உலர் பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் பருகுவது பற்சிதைவு அபாயத்தை குறைக்க உதவுகிறது. இனிப்பு வகைகளை சாப்பிட்டதும் பல் துலக்குவது மற்றும் வாய் கொப்பளிப்பது போன்றவை பற்களில் படிந்திருக்கும் சர்க்கரையை அகற்ற உதவும்.