Health Tips: காலையில் வெறும் வயிற்றில் மறந்தும் கூட இந்த உணவு வகைகளை சாப்பிட்டு விடாதீர்கள்...



Health Tips don't eat some food for morning empty stomach

காலையில் சாப்பிடுவதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். அப்படி நாம் சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் அமிலம் சுரந்து அதன் விளைவாக தேவையில்லாத நோய்கள் வர வாய்ப்புள்ளது. அதே சமயம் காலையில் வெறும் வயிற்றில் சில வகையான உணவுகளை சாப்பிடுவதை காட்டாயம் தவிர்க்க வேண்டும்.

அவை என்ன என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
1. வெறும் வயிற்றில் பழ ஜூஸ் வகைகளை பருகுவதை தவிர்க்க வேண்டும். அதாவது பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்கும் கெடுதல் விளைவிக்கும். அதுபோல் இனிப்பு, கார பலகாரங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
2. காலையில் வெறும் வயிற்றில் இரசாயன குளிர்பானங்கள் பருகுவதும் நல்லதல்ல. அதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் இருக்கும் அமிலங்களுடன் சேர்ந்து குமட்டல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். செரிமானத்தை தாமதப்படுத்தும்.

Empty stomach

3. காலையில் வெறும் வயிற்றில் கொய்யா, ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஜஸ் காபி பருகுவதையும் தவிர்க்க வேண்டும். ஜஸ் காபி நமது உடலில் சுறுசுறுப்பை தொலைத்து மந்தமான உணர்வை ஏற்படுத்திடும்.