மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Health Tips: காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்பளர் வெந்நீர் பருகுவதால் என்ன நடக்கும் தெரியுமா.?
காலை எழுந்தது வெறும் வயிற்றில் தினமும் ஒரு டம்பளர் வெந்நீர் பருகுவது உடலுக்கு மிகவும் சிறந்தது. காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரை பருகுவதன் மூலம், உடலின் வெப்பநிலை அதிகரித்து, மெட்டபாலிசம் மேம்பட்டு, கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் வேகமாக கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.
முக்கியமாக வெந்நீரை காலையில் பருகி வந்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது குறையும். மேலும் மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்றவை ஏற்படாமலும் இருக்கும்.
காலையில் நாம் குடிக்கும் ஒரு டம்பளர் வெந்நீர் உடலில் பல விதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதில் முதலாவது மலக்குடலை சுத்தம் செய்யும் பணியை எளிமையாக்குகிறது. மேலும் பசி உணர்வு அதிகமாகிறது.
அதுமட்டுமின்றி வயிறு உப்புசம் மற்றும் கேஸ்ட்ரிக் தொடர்புடைய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது. சருமம் தெளிவாக இருக்க உதவுகிறது.