அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
"பழைய சோறு பச்சை மிளகாய், பக்கத்து வீட்டுக் குழம்பு வாசம்" பழைய சோறு சாப்பிடுவதனால் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்.?
பழைய சோறு என்று சொன்னால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் தினமும் காலையில் பழைய சோறு என்று சொல்லப்படும் நீராகாரத்தைக் குடித்துவிட்டு தான் வேலையே ஆரம்பிப்பார்கள் என்று கேட்டிருக்கிறோம்.
பொன்னி அரிசியில் சோறு சமைத்து வடித்து விட்டு, 12 மணிநேரம் நீர் ஊற்றி நொதிக்க வைத்து, அடுத்த நாள் காலை அதை அப்படியே உப்பு போட்டு கரைத்து, அல்லது தயிர் ஊற்றி கரைத்து குடிப்பது தான் நீராகாரம். இதை சாப்பிட்டால் அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
பழைய சோற்றுக்கு தொட்டுக்கொள்ள மோர் மிளகாய், ஊறுகாய், துவையல், மொச்சைக்கொட்டை குழம்பு , மிக்சர் என்று எவ்வளவோ ஐட்டங்கள் இருந்தாலும், இந்த பச்சை மிளகாய் தொக்கு தான் பழைய சோற்றுக்குப் பக்காவாக பொருந்தும்.
கால் கிலோ பச்சைமிளகாயுடன் 50கி புளி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வறுத்துப் பொடித்து, பிறகு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து, இந்தக் கலவையை கொட்டி வதக்கினால், பழைய சோறுக்குத் தோதான சைடு டிஷ் ரெடி.