#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"இந்த விஷயங்களை எல்லாம் செய்தால் உடனடியாக இரவில் தூங்கலாம்" என்னென்ன தெரியுமா.?
நவீன சிகிச்சைக்காக பல்வேறு மருந்துகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தூக்கம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு நல்ல தூக்கம் மனித உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
போதுமான அளவு தூங்காத போது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடுகிறது. மேலும் மன நோய், எரிச்சல், கோவம், பதட்டம் இவையெல்லாம் உடலில் உருவாகுவதற்கு போதுமான அளவு தூங்காமல் இருப்பதே காரணமாகும்.
இரவில் நீண்ட நேரம் தூங்குவதற்கு நம் வாழ்க்கை முறையில் சிறு சிறு பழக்கங்களை மாற்றிக் கொள்ளவதன் மூலம் ஆரோக்கியமான தூக்கத்தை பெறலாம். அவை என்னென்ன தெரியுமா?
காலை சூரிய ஒளி உடம்பில் பட செய்வது, தூங்கச் செல்வதற்கு முன்பு உடற்பயிற்சி செய்வது, தினமும் ஒரே நேரத்தில் எழுவது, ஆரோக்கியமான உணவை உண்பது போன்றவற்றை செய்யலாம். மேலும் தூங்கச் செல்வதற்கு முன்பு காப்பி அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறலாம் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.