திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உங்கள் வீட்டு மின்சார பில் 'ஷாக்'அடிக்கிறதா? குறைக்க கொஞ்சம் டிப்ஸ்..
நிறைய வீடுகளில் மின் கட்டணம், வழக்கத்தை விட அதிகமாகி இருக்கிறது. மாத பட்ஜெட்டில் இதற்கென ஒரு பெரிய தொகையை ஒதுக்க வேண்டி உள்ளது. மின்சாரத்தை சேமித்து மின்கட்டணத்தை குறைக்கும் சில எளிய வழிமுறைகளை இப்போது காணலாம்.
வீட்டில் அதிக அளவு மின்சாரத்தை இழுக்கும் பொருட்கள் அயர்ன் பாக்ஸ், ஏசி, பிரிட்ஜ், வாட்டர் ஹீட்டர் போன்றவை. இவற்றை கவனமாக பயன்படுத்தினால் மின்சார செலவை குறைக்கலாம். தற்போது இந்த உபகரணங்களும் எனர்ஜி சேவிங் வகையில் உருவாக்கப்படுகின்றன. பைவ் ஸ்டார் ரேட்டிங் BEE குறியீடு உள்ள உபகரணங்களை வாங்குங்கள்.
மேலும் சோலார் ஆற்றலில் இயங்கும் உபகரணங்களும் தற்போது கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம். டிவி, ஏசி, மிக்ஸி போன்றவற்றை பயன்படுத்தி முடித்த பின் அதன் பவர் சுவிட்சை மட்டும் நிறுத்தாமல், அதன் மெயின் சுவிட்சையும் ஆஃப் செய்யவும். எல்.ஈ.டி பல்புகளை பயன்படுத்துங்கள்.
இரவு முழுவதும் உங்கள் செல்போனை சார்ஜில் போடுவதை தவிருங்கள். வாஷிங் மெஷின் பயன்படுத்தும் பொழுது, இரண்டு மூன்று நாட்கள் உள்ள துணியை சேர்த்து வைத்து துவைக்கலாம். அறையை விட்டு வெளியே வரும் பொழுது மின்விளக்கையும், மின்விசிறியையும் ஆஃப் செய்ய மறக்காதீர்கள்.
பகல் நேரங்களில் மின் விளக்கை போடாமல் ஜன்னல்களை திறந்து வையுங்கள். ஏசியை 24° C கீழே குறைக்க வேண்டாம். இவை யாவும் மின்சார பயன்பாட்டை சிக்கனப்படுத்தும்.