திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒற்றைத் தலைவலியால் கஷ்டப்படுறீங்களா.!? இந்த ஒரு விதை போதும்.! ட்ரை பண்ணி பாருங்க.!?
ஒற்றைத் தலைவலியின் காரணங்கள்
பொதுவாக நம்மில் பலருக்கும் ஒற்றைத் தலைவலி பிரச்சினை என்பது அடிக்கடி ஏற்படுகிறது. மூளையில் ஏற்படும் செரட்டோனின் என்ற வேதிபொருள் மாற்றம் ஒற்றை தலைவலிக்கு காரணமாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த ஒற்றைத் தலைவலி தலையில் வலது புறம் அல்லது இடது புறம் அல்லது பின் பக்கம் போன்ற பகுதிகளில் ஏற்படுகிறது.
வலி மாத்திரைகளின் பக்கவிளைவுகள்
ஒற்றைத் தலைவலிக்கு நிரந்தர தீர்வு என்பது இல்லை என்பதால் வலியின் போது வலி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஒற்றைத் தலைவலி சிறிது நேரம் குறையும். ஆனால் இந்த மாத்திரைகள் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்துவதோடு, பல பக்கவிளைவுகளையும் ஏற்படுகிறது. எனவே ஜாதிக்காயை பயன்படுத்தி ஒற்றைத் தலைவலியை எளிதாக குறைக்கலாம் என்று சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
ஒற்றை தலைவலியை குறைக்க ஜாதிக்காயை பயன்படுத்தும் முறை
ஜாதிக்காயை பொடி பொடியாக இடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் இதை மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு நெற்றியில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒற்றைத் தலைவலி குணமாகும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.