குதிகால் வலி முதல்.. தொண்டை கரகரப்பு வரை.. வீட்டு வைத்தியத்தில் இவ்ளோ ஈஸியா குணப்படுத்தலாமா.?!



homemade-medicine-and-tips

நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே ஒரு சில வலி மற்றும் உடல்நல கோளாறுகளுக்கு தீர்வு காணலாம். அதன்படி, இந்த பதிவில் குதிகால் வலி, தொண்டை கரகரப்பு, தோள்பட்டை வலி மற்றும் சளி இருமல் போன்ற பிரச்சினைகளை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Homemade medicine

குதிகால் வலி

பொதுவாக குதிகால் வலி அதிகமாக நடப்பது, அதிக எடையை தூக்குவது, முறையற்ற காலணிகளை அணிவது மற்றும் உடல் எடை அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் தான் குதிகால் வலி ஏற்படுகிறது. இதற்கு நொச்சி இலைகள் 10, வாதம் முடக்கி 5 இலைகளை எடுத்துக்கொண்டு வாணலியில் சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, மிதமான சூட்டில் குதிகாலில் வைத்து கட்ட வலி குணமாகும். அதேபோல் எருக்கன் செடி இலைகளை நெருப்பில் வாட்டி குதிகாலில் பற்று போட்டால் நல்ல பலன் அளிக்கும்.

தோள்பட்டை வலி

ஒரு வானலியில் மணலை போட்டு நல்ல மிதமான சூட்டில் வறுத்து, அதனை ஒரு துணியில் சிறு மூட்டையாக கட்டி, வலிக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் தோள்பட்டை வலி நீங்கும். அதேபோல் கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

Homemade medicine

தொண்டை கரகரப்பு

அதிமதுர துண்டு ஒன்றை சிறிதாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டு அதன் உமிழ்நீரை விழுங்கி வர தொண்டை கரகரப்பு சரியாகும்.

சளி இருமல்

துளசி 20 இலைகள், மிளகு 10, இஞ்சி ஒரு துண்டு, கற்பூரவள்ளி 5 இலைகள் சேர்த்து வானலியில் நன்றாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, மஞ்சள் தூள் அரை ஸ்பூன் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் சளி மற்றும் இருமல் குணமாகும்.