53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
ஹோட்டல் ஸ்டைலில் சுவையான சால்னா செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
கடைகளில் பரோட்டா, சப்பாத்தி சாப்பிட செல்லும் பலரும் சைவ குருமாவை எதிர்பார்த்து காத்திருப்பது உண்டு. சுவையான சைவ குருமா பரோட்டாவுக்கு மட்டுமல்லாது சப்பாத்திக்கும் பலருக்கும் பிடிக்கும். ஒருசிலர் வீடுகளில் அதனை செய்து சாப்பிடவும் நினைப்பார்கள். அவர்களுக்கான அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது. இன்று சைவ குருமா (Veg Kurma) செய்வது குறித்து காணலாம்.
தேவையான பொருட்கள்:
ஏலக்காய், பெருங்சீரகம், கிராம்பு, கசகசா, அன்னாசிப்பூ, இலவங்கபட்டை, பொருட்கள் - சிறிதளவு,
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தேங்காய் - 1/2,
முந்திரி - 8,
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு,
புதினா & கொத்தமல்லி - சிறிதளவு,
தக்காளி - 1,
மஞ்சள் தூள் - 2 கரண்டி,
தனியா தூள் - 2 கரண்டி,
சிக்கன் மசாலா - 3 கரண்டி அல்லது உங்களின் காரத்திற்கேற்ப,
கரம் மசாலா - 2 கரண்டி,
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட தேங்காய், பெருஞ் சீரகம் @ சோம்பு, கசகசா, முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு விழுது போல அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வானெலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், இலவங்கம், சோம்பு, கிராம்பு உட்பட பிற பொருட்களை சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.
இவை நன்கு வதங்கியதும் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறிவிடவும்.
இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை மாறியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இப்போது வெங்காயம் - தக்காளி சேர்ந்து குலைந்த நிலையில் இருக்கும் தருவாயில், அதனுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்க வேண்டும்.
இவற்றுடன் மஞ்சள் தூள், தனியா தூள், சிக்கன் மசாலா ஆகியவற்றை சேர்ந்து உப்பு சரிபார்த்து அடுப்பை கூட்டி வைக்கலாம்.
மிதமான தீயில் சுமார் 10 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை கொதித்ததும், புதினா மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்க சுவையான சால்னா தயார்.
இதனுடன் சுண்டல் மற்றும் காய்கறி சேர்த்துக்கொண்டால் காய்கறி குருமா, கோழி இறைச்சி சேர்த்துக்கொண்டால் அசைவ குருமா ஆகும்.