#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வீட்டில் எப்போதும் பல்லி, கரப்பான் பிரச்சனையா?.. இந்த வழிமுறையை செய்து பாருங்களேன்.!
நமது வீட்டில் பல்லி, கரப்பான்பூச்சி போன்ற ஆரோக்கியத்தை கெடுக்கும் சில பூச்சிகள் எப்போதும் வீட்டில் இருந்து கொண்டிருக்கும். இந்த பூச்சிகளை விரட்டியடிக்க சந்தையில் மருந்துகள் கிடைக்கின்றன. விலை உயர்ந்த இந்த மருந்துகளை வாங்குவதற்கு பதில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அதனை விரட்டியடிக்கலாம்.
புகையிலை மற்றும் காப்பி ஆகியவற்றை சிறிய மாத்திரைகளாக உருவாக்கி, தீப்பெட்டி அல்லது பற்பசையில் ஒட்டி அலமாரி பகுதிகளில் வைத்தால் பல்லிகள் ஓடும். இவற்றின் வாசனை பல்லிகளுக்கு பிடிக்காது. மேலும் அந்துருண்டை வைப்பதால் அந்த வாசனைக்கு பூச்சிகள் வராது.
நமது வீட்டை தூய்மையாக வைத்திருந்தாலும் பூச்சிகள், பல்லிகள் இருக்காது. பூண்டுச்சாறை வீடு முழுவதும் தெளித்துவிட கரப்பான் பூச்சி, பல்லி போன்ற எந்த பூச்சியும் அண்டாது. கிராம்பை கட்டியும் தொங்கவிடலாம். வெங்காயத்தின் சாறு எடுத்து அதனை தெளித்தால் அவற்றின் வாசனைக்கு அவை ஓடிவிடும்.