மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புருவங்களை ஒருவாரத்தில் அடர்த்தியாக்க அருமையான டிப்ஸ்.. இன்றே டிரை பண்ணுங்க..!!
புருவங்களை அடர்த்தியாக்குவதற்கான இயற்கையான வழி குறித்து விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.
தேங்காய் எண்ணெய் முடி வளர்ச்சியை தூண்டும். இதனால் இந்த எண்ணெயை புருவங்கள் மீது தடவி வந்தால், அப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் மயிர்கால்கள் வலுப்பெற்று புருவம் அடர்த்தியாக வளரும்.
விளக்கெண்ணெயை தினமும் இரவு நேரத்தில் உறங்குவதற்கு முன்னர் புருவங்களில் தடவி மென்மையாக மசாஜ் செய்து வர, புருவங்களில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக வளரும். இதனை ஒரு மாதம் தொடர்ந்து செய்துவந்தால் உருவ அமைப்பில் நல்ல மாற்றத்தை காணலாம்.
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் ஈ உள்ளன. இது முடிக்கு நல்ல ஊட்டத்தினை வழங்கி, அதன் வளர்ச்சியை தூண்டும். இரவு நேரத்தில் பாதாம் எண்ணெயை புருவங்களில் மென்மையாக தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் உறவைத்து காலையில் கழுவினால் முடிவளர்ச்சி தூண்டப்படும்.
கற்றாழை ஜெல்லை இரவு நேரத்தில் உறங்குவதற்கு முன்னர் புருவங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவினால் புருவங்கள் வளர்ச்சியாகும். முட்டையின் மஞ்சள் கருவை புருவத்தின் மீது தடவி 20 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர புருவங்கள் நன்கு வளரும்.
வெந்தயத்தை நீரில் நன்றாக ஊற வைத்து பேஸ்ட் போல அரைத்து புருவம் மீது தடவி 20 நிமிடம் வரை ஊற வைத்து கழுவினால் புருவங்கள் நன்றாக வளரும். இவ்வாறு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே புருவத்தை அடர்த்தியாக வளர்க்கலாம்.