வாயில் வைத்தாலே கரையும் கருப்பட்டி மிட்டாய்.!



How to make Blackberry Candy

கருப்பு உளுந்தை சேர்த்து இந்த மிட்டாய் செயயலாம் இது உடலுக்கு மிகவும் நன்மை தரும். இதை செய்வதும் சுலபமான காரியம் தான். இதனை எப்படி செய்யலாம் என்பதை பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

Karuppatti Mittai

தேவையான பொருட்கள் :

எண்ணெய்

வெல்லம் - 250 கிராம்

பச்சரிசி - 1 கப்

கருப்பு உளுந்து - 1 கப்

செய்முறை :

கருப்பு உளுந்தையும், பச்சரிசியையும், நன்றாக கழுவி, ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு இதனுடன் தண்ணீரை சேர்த்து, வடை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வெல்லத்தில் தண்ணீரை ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். சிறு கம்பி பதம் வரும் வரையில் இதனை அடுப்பில் வைத்திருக்க வேண்டும்.

Karuppatti Mittai

அடுத்த கட்டமாக அரைத்து வைத்துள்ள மாவை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, அதன் மேல் பகுதியை மூடி, கீழே ஒரு ஓரத்தில் சிறிய அளவிலான ஓட்டை போட வேண்டும். எண்ணெயை கொதிக்க வைத்து, அதில் கருப்பட்டி மிட்டாய் வடிவம் வருவதை போல பெரிதாக தொடர்ந்து பிழிந்து கொள்ள வேண்டும். புழிந்தவுடன் இதனை வெல்ல பாகில் போட்டு, 2 நிமிடங்கள் வரையில் வைத்திருக்க வேண்டும். இப்படி செய்தால், கருப்பட்டி மிட்டாய் தயாராகிவிடும்.