#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிறந்த குழந்தைகளை ஈஸியா தூங்க வைக்கலாம்.. எப்படி தெரியுமா.?
குழந்தைகள் பிறந்தது முதல் குறிப்பிட்ட வயது ஆகும் வரை பெற்றோர்களுக்கு தூக்கம் என்பது மிகவும் கஷ்டமான செயலாக மாறிவிடும். பெற்றோர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் தூங்குவதற்கு கஷ்டப்படுவாங்க.
குழந்தைகளை தூங்க வைக்க பல பெற்றோர்கள் கஷ்டப்பட்டு வரும் நிலையில், ஈஸியாக தூங்க வைப்பதற்கு சில செயல்களை செய்யலாம். அவை என்ன என்று பார்க்கலாம் வாங்க.
முதலில் குழந்தைகள் தூங்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான சுடுநீரில் குளிக்க வைத்து சிறிது மசாஜ் செய்ய வேண்டும். பின்பு தலையிலிருந்து கண்கள் வரை லேசாக தடவி விட்டு வந்தால் அவர்கள் உடனடியாக தூங்கி விடுவார்கள்.
மேலும் ஒரு சில சத்தம் குழந்தைகளை அமைதிப்படுத்தும். அதாவது நீரின் சத்தம், தாலாட்டு பாடல் போன்றவைகளை குழந்தைகள் தூங்கும் போது போட்டு விடலாம். இதன் மூலம் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பி தூங்க செய்யலாம்.