அரைத்த பூண்டு குழம்பை இப்படி செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.! உடனே ட்ரை பண்ணுங்க.!



How to make minced garlic gravy

அரைத்த பூண்டு குழம்பை இந்த வகையில் செய்தால், மிகவும் டேஸ்டாக இருக்கும். மேலும், இந்த குழம்பு 3 தினங்கள் வரையில், கெட்டுப் போகாமலிருக்கும். தற்போது அந்த அரைத்த பூண்டு குழம்பை எளிமையாக செய்வது எப்படி என்பது பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

உப்பு - தேவையான அளவு

1 டம்ளர் - தண்ணீர்

புளி கரைசல் - 50 எம்.எல்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

பூண்டு - 1 கைப்பிடியளவு

சின்ன வெங்காயம் - 10

கருவேப்பிலை

வெந்தயம்

கடுகு

எண்ணெய் - 5 டீஸ்பூன்

தக்காளி -3

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பூண்டு - 15

garlic gravy

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி, அதில் கருவேப்பிலை, பூண்டு, மிளகு, வெந்தயம், சீரகம் போன்றவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்னர் அத்துடன், தக்காளியை சேர்த்து அரைத்துக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, அதில் வெந்தயத்தையும், கடுகையும் சேர்த்து, பின்னர் அதில் பூண்டு, வெங்காயம், கருவேப்பிலை போன்றவற்றை சேர்க்க வேண்டும்.

garlic gravy

அதனை நன்றாக வதக்கவும். நிறம் மாறியவுடன் அரைத்து பேஸ்ட்டாக வைத்திருப்பதை அத்துடன் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கி, பின்னர் அதில் புளி கரைசலை ஊற்றி, அதன்பின் தண்ணீரை சேர்த்து, உப்பை தூவி, கொதிக்க வைத்து இறக்கி வைத்தால், சுவையான அரைத்த பூண்டு குழம்பு ரெடி.