ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
டயட் இருப்போருக்கு வரப்பிரசாதம்.. சுவையான கேழ்வரகு கொள்ளு தோசை தயார் செய்வது எப்படி?..!
இன்றளவில் டயட் என்பது பலருக்கும் பரீட்சியமான வார்த்தையாகிவிட்டது. டயட் இருக்கும் நபர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவான கேழ்வரகு கொள்ளு தோசை செய்வது எப்படி என இன்று காணலாம்.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு - 2 கிண்ணம்,
கொள்ளு - அரை கிண்ணம்,
ஜவ்வரிசி - 4 கரண்டி,
வெந்தயம் - 2 கரண்டி,
உப்பு, நெய் - தேவையான அளவு.
செய்முறை:
★முதலில் எடுத்துக்கொண்ட கேழ்வரகு, கொள்ளு, வெந்தயம் மற்றும் ஜவ்வரிசியை நன்கு கழுவி 8 மணிநேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
★பின்னர், இதனை மிக்ஷின் அல்லது கிரைண்டரில் சேர்த்து அரைத்து, தோசை மாவு பதம் வந்ததும் பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். இதனை தோசை மாவை போல புளிக்க விட வேண்டும்.
★இறுதியாக்க தோசைக்கல்லில் மாவை ஊற்றி தோசை போல ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் சுவையான கேழ்வரகு கொள்ளு தோசை தயார்.