காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
எலுமிச்சை, பூண்டு ஊறுகாய் சாப்பிட்டு சலித்துவிட்டதா?.. சிக்கன் ஊறுகாய் ட்ரை பண்ணி பாருங்கள்.!
தினமும் நாம் மாங்காய், எலுமிச்சை, பூண்டு, நார்த்தங்காய் போன்று பல்வேறு விதமான ஊறுகாய்களை சாப்பிட்டு இருப்போம். சிக்கனில் ஊறுகாய் செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. பொதுவாக மட்டனில் உப்புக்கண்டம் என்பதை சிறுவயதில் சாப்பிட்டு இருப்போம். அதனைப்போல சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி என இன்று தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத கோழி இறைச்சி - 1 கிலோ,
மிளகாய் தூள் - 8 கரண்டி,
உப்பு - 7 கரண்டி,
இஞ்சி பூண்டு விழுது (கைப்பட அரைத்து) - 4 கரண்டி,
எலுமிச்சை சாறு - 1/2 கரண்டி,
கடுகுப் பொடி - 2 கரண்டி,
சீரகம் மற்றும் வெந்தயபொடி - 1 கரண்டி,
கரம் மசாலா - 1/2 கரண்டி,
பூண்டு - 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
சீரகம் - 2 கரண்டி,
கடுகு - 2 கரண்டி,
மஞ்சள் - 1/2 கரண்டி,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, சிறுசிறு துண்டாக நடுக்க வேண்டும். பின்னர், பூண்டினை தோல் உரித்து, கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கனை சேர்ந்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, உரித்து வைத்த பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். சிறிதளவு கறிவேப்பில்லை. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மஞ்சள் சேர்த்து கிளறவும்.
மற்றொரு சிறிய அளவிலான பாத்திரத்தில் மிளகாய் தூள், உப்பு, கடுகுப்பொடி மற்றும் சீரகம், வெந்தயப்பொடி, கரம் மசாலா, எலுமிச்சை சாறு சேர்த்து கிளற வேண்டும். இதனை எண்ணெய் கடாயில் போட்டு வதக்கியதும், மசாலா வாசனை போனதும் பொரித்து வைத்துள்ள இறைச்சியை சேர்த்து கிளற வேண்டும்.
இப்போது சுவையான சிக்கன் ஊறுகாய் தயார்.