சுவையான தயிர் சேமியா.. வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்வது எப்படி?..! வாங்க பார்க்கலாம்..!!



How to Prepare Curd Semiya

சேமியா என்றால் பிடிக்காத நபர்களே இல்லை என்று தான் கூற வேண்டும். பத்து நிமிடத்தில் செய்யும் தயிர் சேமியா எப்படி செய்வது என்று காணலாம்.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - ஒன்று 
சேமியா - இரண்டு கப்
பால் - ஒரு கப் 
தயிர் - இரண்டு கப் 
கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு 
பச்சை மிளகாய் - 3 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 

தாளிப்பதற்கு :

உளுந்தம் பருப்பு - கால் கரண்டி கடலைப்பருப்பு - அரை கரண்டி 
முந்திரி - தேவைக்கேற்ப 
கடுகு - கால் கரண்டி 

செய்முறை :

★முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடிபொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

★பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும், தாளிக்கும் பொருட்களை சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலையை வதக்க வேண்டும்.

★வெங்காயம் நன்கு வதங்கியதும், சேமியாவை சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வைக்க வேண்டும்.

★இறுதியாக தயிர் சேர்த்து கலக்கினால் தயிர் சேமியா தயாராகிவிடும்.