இட்லி-தோசைக்கு அருமையான, சத்தான முருங்கைக் கீரை பொடி செய்வது எப்படி?..!



How to Prepare drumstick leaves Powder for Idly and Dosa 

முருங்கைக்காய், முருங்கை கீரை ஆகியவை உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளை தன்னகத்தே கொண்டவை ஆகும். இதனை பொறித்தும், குழம்பு வைத்தும் சுவையாக சாப்பிடலாம். இன்று முருங்கைக்கீரையில் பொடி செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம். 

முருங்கைக்கீரை பொடி செய்யத் தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை - 5 கப், 

உளுந்து - 200 கிராம்

கடலை பருப்பு - 50 கிராம்,

மல்லி - 2 கரண்டி,

சீரகம் - 2 கரண்டி,

மிளகு - 1 கரண்டி, 

காய்ந்த மிளகாய் - 12,

உப்பு - தேவையான அளவு,

பூண்டு - 50 கிராம்,

பெருங்காயத்தூள் - 1/2 கரண்டி.

Recipe

செய்முறை

முதலில் எடுத்துக்கொண்ட முருங்கைக்கீரையை நன்கு சுத்தம் செய்து, பின் அதனை துணியில் சேர்த்து உலரவிட்டு எடுக்க வேண்டும். முருங்கை கீரை காய்ந்ததும் வானெலியில் இட்டு மிதமான தீயில் மனம் வரும்வரை வறுக்கவும்.

இதையும் படிங்க: COOKING TIPS : உணவின் சுவையை அதிகரிக்க இந்த 10 குறிப்புகளை ட்ரை பண்ணி பாருங்க.!?

கடலைப்பருப்பு, மல்லி, சீரகம், மிளகு, வரமிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

முருங்கை கீரையுடன் மேற்கூறிய பொருட்களை மிக்சியில் சேர்த்து உப்பு, சிறிதளவு புளி, பெருங்காயத்தூள் ஆகியவை இட்டு நன்கு அரைத்து எடுக்க வேண்டும். இதனை இட்லி, தோசைக்கு மட்டுமல்லாது சூடான சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.