#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடடே.. குழந்தைகளுக்கு பிடித்த சுவையான தயிர் சேமியாவை வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.!
உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் தயிரை வைத்து தயிர் சாதம் செய்து சாப்பிட்ட பலருக்கும், சேமியாவில் தயிர் சாதம் செய்யலாமா? என்பது தெரியாமல் கூட இருக்கலாம். இன்று தயிர் சேமியா செய்வது குறித்து காணலாம்.
தேவையான பொருட்கள்:
சேமியா- 2 கப்,
தயிர்- 3 கப்,
கடுகு- 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு,
உளுத்தம் பருப்பு- 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய்- 3,
பச்சை மிளகாய்- 1,
பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை,
எண்ணெய்- 1 ஸ்பூன்,
முந்திரி பருப்பு- 1 ஸ்பூன்,
மாதுளை- அரை கப்,
தேங்காய் துருவியது- 2,
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
★முதலில் எடுத்துக்கொண்ட பச்சை மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து நீர் ஊற்றி, நன்கு கொதித்ததும் உப்பு மற்றும் எண்ணெய் விட்டு கொத்தி வந்ததும் சேமியாவை சேர்க்க வேண்டும்.
★சேமியா வெந்ததும் தனியே வடித்து எடுத்து வைக்கவும். அதனை குளிர்ந்த நீரில் அலசினால் உதிரி உதிரியாக கிடைக்கும். பின் தயிரை தனியொரு பாத்திரத்தில் வைத்து, வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வர மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து தயிரை ஊற்ற வேண்டும்.
★மிக்சியில் முந்திரி, தேங்காய் சேர்த்து அரைத்து தயிரில் இட்டு, வேகவைத்த சேமியாவையும் சேர்த்து கிளறிவிட்டு இறக்கும் தருவாயில் மாதுளை மற்றும் கொத்தமல்லித்தழைகளை தூவினால் சுவையான தயிர் சேமியா தயார்.