ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
உடலுக்கு கிடைத்த கொடை.. அருமையான கொள்ளு அடை செய்வது எப்படி?..!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்களும், உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டும் என்பவர்களும் கொள்ளு சாப்பிடலாம். அதனை துவையல், குழம்பு போன்ற வழிகளிலும் சமைக்கலாம். இன்று கொள்ளு அடை செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - ஒரு கிண்ணம்,
அரிசி - கால் கிண்ணம்,
காய்ந்த மிளகாய் - 4,
எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு.
தாளிப்பதற்கு:
எண்ணெய் - ஒரு கரண்டி,
கடுகு, சீரகம், சோம்பு - கால் கரண்டி,
உளுந்தம் பருப்பு - ஒரு கரண்டி,
இஞ்சி - சிறிதளவு,
வெங்காயம் - 2,
பெருங்காயம் - சிறிதளவு.
செய்முறை:
★முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்க வேண்டும். கொள்ளு & அரிசி இரண்டையும் 4 மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
★தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து அடைமாவு பதத்தில் கரைத்து சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும்.
★பின்பு கடாயில் தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து தாளித்து, தோசை போல ஊற்றி எடுத்தால் சத்தான கொள்ளு அடை தயார்.