காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ஆஹா.. நாக்கில் எச்சில் ஊறவைக்கும் ஜில் ஜில் ஜிகர்தண்டா.. வீட்டிலேயே அற்புதமாக செய்து அசத்துவது எப்படி?..!!
மதுரையில் மட்டும் பிரபலமாக விற்பனை செய்யப்பட்ட ஜிகர்தண்டா, தற்போது அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது. இதனை வீட்டிலேயே எளிமையாக செய்யும் முறை குறித்து இன்று காணலாம்.
தேவையான பொருள்கள் :
நன்னாரி - 3 டேபிள் ஸ்பூன்
பால் - ஒரு லிட்டர்
பாதாம் பிசின் - ஒரு ஸ்பூன்
பிரஸ் கிரீம் - அரை கப்
சர்க்கரை - அரை கப்
வெண்ணிலா எசன்ஸ் - அரை ஸ்பூன்
பால்கோவா - 2 ஸ்பூன்
செய்முறை :
★முதலில் எடுத்துக்கொண்ட பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலினை ஊற்றி, குறைந்த தீயில் 10 நிமிடம் சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.
★பின்னர் அதில் சர்க்கரையை சேர்த்து குறைவான தீயில் பாதி சுண்டும் வரை கொதிக்க விடவும். அதன் நிறம் மாறிய பின்னர் ஒரு கப் பாலை எடுத்து தனியாக குளிர வைக்க வேண்டும்.
★அடுத்து மீதமுள்ள பாலினை 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். அதனைத் தொடர்ந்து பால்கோவா சேர்த்து நன்கு கலந்து பிரஸ்கீரீம், வெண்ணிலா எசன்ஸ் போன்றவற்றை சேர்த்து ஃப்ரீசரில் 3 மணிநேரம் முதல் 4 மணிநேரம் வரை வைக்க வேண்டும்.
★இப்போது அது ஐஸ்கட்டியானதும் அதனை உடைத்து மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்து இறுதியாக பாதாம் பிசினை ஊற்றி இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் 2 ஸ்பூன் நன்னாரி, பாதாம் பிசின், பால் போன்றவற்றை சேர்த்து ஐஸ்கிரீம் போட்டு பரிமாறினால் ஜிகர்தண்டா தயார்.