சுவையான, கமகமக்கும் காளான் மிளகு சாதம் செய்வது எப்படி?.. உணவு பிரியர்களே தெரிஞ்சிக்கோங்க.!



How to Prepare Kalan Milagu Satham 

 

வீட்டில் சமைத்து பரிமாறப்படும் உணவுகளில் புதிய செயல்முறை என்பது நமக்கு உணவின் சுவையை எப்போதும் அதிகரித்தே வழங்கும். இன்று காளான் மிளகு சாதம் செய்வது எப்படி என காணலாம். 

காளான் மிளகு சாதம் செய்யத் தேவையான பொருட்கள்:

காளான் - ஒரு கிண்ணம்,
சோம்பு - ஒரு கரண்டி,
இஞ்சி பூண்டு விழுது - கால் கரண்டி,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பச்சைமிளகாய் - 4,
நறுக்கிய வெங்காயம் - 2,
மிளகுத்தூள் - ஒரு கரண்டி,
தனியா தூள் - ஒரு கரண்டி,
கரம் மசாலாதூள் - ஒரு கரண்டி,

செய்முறை:

முதலில் வானெலியை அடுப்பில் எண்ணெய் ஊற்றி சோம்பு, வெந்தயம், பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, பச்சை வாசனை மாறியதும் மஞ்சள் தூள், தனியா தூள், கரம்மசாலா, மிளகுத்தூள், காளான் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்க வேண்டும். இறுதியாக அரை பதத்திற்கு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அதில் ஒரு குழிக்கர்ண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோம்பு, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இஞ்சிபூண்டு விழுந்து சேர்த்து பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்க வேண்டும்.

மசாலா வாசனை போகும்வரை காத்திருந்து, அதனை கிளறிவிட்டு சிறிதளவு நீர் ஊற்றி வேகவைத்து இறக்க வேண்டும். இதனோடு, ஏற்கனவே வேகவைத்த சாதத்தினை சேர்த்து கிளறினால் சுவையான காளான் மிளகுசாதம் தயார். இறுதியாக கொத்தமல்லி தழைகளை தூவி பரிமாறினால் சுவையான மிளகு சாதம் தயார்.