சுவையான கோவக்காய் பகோடா செய்வது எப்படி?.. பல நோய்களுக்கு அருமருந்தான கோவைக்காய்.!



How to prepare kovaikai bakoda

கோவைக்காயை நாம் உணவில் சேர்த்து வந்தால் சொரியாசிஸ், தேமல், படை, சிரங்கு, சர்க்கரை நோய், பல் சார்ந்த பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகள், தோல் நோய்கள் குணமாகிறது. இன்று கோவைக்காய் பகோடா செய்வது குறித்து காணலாம். 

தேவையான பொருட்கள்: 

கோவைக்காய் - 1 கிலோ, 

வெங்காயம் - 2, 

சோம்பு - 1/2 கரண்டி, 

கடலை மாவு - 4 கரண்டி, 

அரிசி மாவு - 2 கரண்டி,

பச்சை மிளகாய் - 2, 

மிளகாய்த்தூள் - 2 கரண்டி, 

குழம்பு மிளகாய்தூள் - 1 கரண்டி, 

கறிவேப்பிலை - கைப்பிடி அளவு,

எண்ணெய் & உப்பு - தேவையான அளவு.

health tips

செய்முறை: 

முதலில் எடுத்துக்கொண்ட கோவக்காய், வெங்காயத்தை சுத்தம் செத்து, நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பாத்திரத்தில் கோவைக்காய், வெங்காயம், சோம்பு, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைய வேண்டும்.

பின் தண்ணீர் ஊற்றாமல் கலக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். பின்னர் வானெலியில் எண்ணெய் ஊற்றி கோவக்காய் கலவையை பொன்னிறமாக வறுத்து எடுத்தால் சுவையான கோவக்காய் பகோடா தயார்.