மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5 நிமிடத்தில் வீட்டிலேயே பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?.! அருமையான ரெசிபி மிஸ் பண்ணிடாதீங்க..!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் அவல் பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்பது பற்றியதுதான் இந்த செய்திக்குறிப்பு.
தேவையான பொருட்கள் :
பாதாம் பவுடர் - 1 தேக்கரண்டி
பால் - 500மி.லி
அவல் மாவு - 1 கப்
வெல்லம் - தேவைக்கேற்ப
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
செய்முறை :
★ஒரு அகலமான பாத்திரத்தில் அவல் மாவு சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு, நெய் மற்றும் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும்.
★பின் பாதாம் பவுடரை, மிதமான பாலுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
★அதனுடன் ஏலக்காய் மற்றும் பொடித்த வெல்லம் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
★பின் உருட்டி வைத்த உருண்டைகளை அதில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
★5 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கினால் அவல் பால் கொழுக்கட்டை தயாராகிவிடும்.