ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவைமிக்க பச்சை பட்டாணி வடை.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?.!
சுவைமிக்க பருப்பு வடையின் அல்டிமேட் வெர்சனாக கருதப்படும் பச்சை பட்டாணி வடை செய்வது எப்படி என இன்று காணலாம்.
தேவையான பொருட்கள்:
காய்ந்த பச்சை பட்டாணி - 300 கிராம்,
கடலை பருப்பு - 100 கிராம்,
அரிசி - 2 கரண்டி,
பெரிய வெங்காயம் - 2,
பெருங்காயத்தூள் - 2 சிறிய கரண்டி,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
இஞ்சி துண்டு, சிறிதளவு,
பச்சை மிளகாய் - 2,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட இஞ்சி, வெங்காயம், கறிவேப்பில்லை, கொத்தமல்லியை பொடிப்பொடியாக நறுக்க வேண்டும். காய்ந்த பச்சை பட்டாணி, கடலைப்பருப்பு, அரிசி ஆகியவற்றை 2 மணிநேரம் ஊறவைத்து எடுக்க வேண்டும்.
இவற்றுடன் 2 மணிநேரம் கழித்து உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கட்டியாக கொரகொரப்புடன் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த மாவில் வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாக தட்டி எண்ணெயில் இட்டு எடுத்தால் பச்சை பட்டாணி வடை தயார்..
குறிப்பு: கடைகளில் இன்றளவில் வாங்கும் பச்சை பட்டாணியில் நிறமி இருப்பதாக சந்தேகப்பட்டால், அதுகுறித்து உணவுப்பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.
கட்டாயம் அதை நான் சாப்பிடுவேன் என்று விருப்பமுடையோர் இரவில் ஊறவைத்து, காலையில் சுத்தமான நீரில் 4 முதல் 5 முறை வரை நன்கு அலசிவிட்டு உங்களின் விருப்பத்திற்கேற்ப முடிவெடுக்கலாம்.