அடடே.. சுரைக்காயில் இவ்வளவு நன்மைகளா?..! சுவையான சுரைக்காய் வடை செய்வது எப்படி?..!
சுரைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. இதை சாப்பிடுவதால் உடலில் உள்ள உப்பு நீர் வெளியேறும், உடல் சூட்டை குறைக்கும், தேவையற்ற சதைகளையும் குறைக்கும். இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
சுரைக்காய் வடை செய்ய தேவையான பொருட்கள்:
சுரைக்காய் துருவியது-1 கப்,
அரிசி மாவு-1 கப்,
பச்சை மிளகாய் - 3,
வெங்காயம்- 2,
மிளகு சீரகம்- ஒரு ஸ்பூன்,
உப்பு- தேவையான அளவு,
கறிவேப்பில்லை- சிறிதளவு.
செய்முறை:
★ஒரு பாத்திரத்தில் துருவிய சுரைக்காயை வெள்ளைத் துணியால் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின்பு அரிசி மாவை அதில் சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, சீரகம், மிளகு, உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக கிளறவும்.
★பின்பு கடாயில் எண்ணெய் விட்டு பிசைந்த மாவை வடை போல் தட்டி பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான சுரைக்காய் வடை தயார்.
நன்மைகள்: சுரைக்காய் கல்லீரல் கிட்னியை பாதுகாக்கும். பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து, இரும்புச்சத்து, பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன.