வெயிலுக்கு உடலை குளுமையாக்கும் தென்னம்பூ லேகியம்.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!!



How to prepare Tennamboo Lekiyam

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலை குளிர்விக்கும் தென்னம்பூ லேகியம் எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்திதொகுப்பு.

தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய் உள்ளிட்டவை உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும். அதுபோல தென்னையின் பூவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது துவர்ப்பு தன்மை கொண்டது. 

உடல் வெப்பத்தை போக்கி குளுமையாக்கும். சிறுநீரை பெருக்கும். தென்னம்பூ சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், அதிக ரத்தப்போக்கு, கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளும் தீரும்.

தேவையான பொருட்கள் :

பெரிய தென்னம்பூ - 1

ஓமம் - 50 கிராம்

சதுப்பா - சிறிதளவு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)

சீரகம் - 50 கிராம்

நாட்டு சர்க்கரை - 2 கிலோ

கருப்பு கடுகு - 50 கிராம்

வெள்ளை கடுகு - 50 கிராம்

வெந்தயம் - 50 கிராம்

சிவப்பரிசி - 50 கிராம்

நல்லெண்ணெய் - 100 மில்லி

கடுக்காய், ஜாதிக்காய் - 2

தேங்காய் - 3

மஞ்சள் கிழங்கு - 2 துண்டு

நெய் - 100 கிராம்

சாலி விதை - 50 கிராம்

Latest news

செய்முறை :

★முதலில் தேங்காய்களை அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். ஓமம் சீரகம் வெள்ளை கடுகு, கருப்பு கடுகு வெந்தயம், ஜாதிக்காய் கடுக்காய், மஞ்சள் கிழங்கு, சிவப்பரிசி ஆகியவற்றை தண்ணீரில் ஊறவைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

★பின் அதனுடன் தென்னம்பூ சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் பெரிய கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்து விழுதை சேர்த்து மிதமான சூட்டில் வதக்க வேண்டும்.

★பின் பொடித்த நாட்டு சர்க்கரையை அதில் கலக்கவும். கிளறி கலவை சுருண்டு வரும்போது அதில் நெய் ஊற்றி கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கடைசியில் தண்ணீரில் கழுவி சுத்தம்செய்த 50 கிராம் சாலி விதைகளை இந்த கலவையுடன் சேர்க்கவும்.

★இறுதியாக கலவையிலிருந்து எண்ணெய் பிரியும். இந்த கலவை ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். சாப்பாடு உண்ட பின் இந்த லேகியத்தை சாப்பிடலாம்.