53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அடடே என்ன ஒரு டேஸ்ட்.? வறுத்த தேங்காய் தக்காளி சட்னி செய்வது எப்படி.?
மிக மிக சுவையான தேங்காய் தக்காளி சட்னி செய்வது எப்படி என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை இலைகள் -10
உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ½ டீ ஸ்பூன்
கடுகு -1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் -1 டீஸ்பூன்
தாளிக்க :
உப்பு - தேவையான அளவு
நறுக்கிய தக்காளி - 2
சீரகம்-½ டீஸ்பூன்
நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 8 இலைகள்
முழு உலர்ந்த சிவப்பு மிளகாய்- 3
நறுக்கிய சிறிய வெங்காயம் -¼ கப்
துருவிய தேங்காய் - 1 கப்
செய்முறை:
மிதமான வெப்பத்தில் ஒரு கடாயை சூடாக்கி, அதில் துருவிய தேங்காயை போட்டு, சின்ன வெங்காயம், சிவப்பு மிளகாய், கருவேப்பிலை, சீரகம், இஞ்சி போன்றவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். தேங்காய் தங்க நிறத்தில் மாறும் வரையில் வறுத்துக் கொள்ளவும். இத்துடன் உப்பு, தக்காளி போன்றவற்றை சேர்த்து, தக்காளியை நன்றாக வதக்கவும்.
பின்பு அது குளிர்ந்தவுடன் 1 ¼ தண்ணீரோடு ஒரு பிளெண்டரில் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து, பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிதமான வெப்பத்தில் ஒரு கடாயை வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ளவும்.
பின்பு எண்ணெய் சூடானவுடன் தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து, பருப்பின் நிறம் பழுப்பாக மாறும் வரையில் வறுத்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலையை சேர்த்து, அதன் பின்னர் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பின் அளவை சரி பார்த்துக் கொண்டு, அந்த கலவையை 3 நிமிடங்களுக்கு நன்றாக சமைக்க வேண்டும். பின்பு சூடான தோசை மற்றும் இட்லியுடன் சேர்த்து பரிமாறலாம்.