#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆரோக்கியமான சுவையான கார உப்பு உருண்டை.. வீட்டிலேயே அசத்தலாக செய்வது எப்படி?..!!
ஆரோக்கியமான சுவையான ஸ்னாக்ஸ்-ஐ வீட்டிலேயே எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கேற்ப
அரிசி மாவு - ஒரு கப்
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் துருவல் - 5 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
செய்முறை :
★முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசிமாவை சேர்த்து அதனுடன் உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
★பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
★அடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இவற்றுடன் அரிசிமாவை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
★சூடாக இருக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக மாவில் ஊற்றி கிளறி நன்றாக மாவு வெந்து வந்தபின் உருண்டையாக உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
★பின் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
★இறுதியாக இட்லிதட்டில் ஒரு காட்டன் துணியை விரித்து அதன்மேல் இந்த உருண்டைகளை வைத்து இட்லி பானையில் 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
★அவ்வளவுதான் மிருதுவான ஆரோக்கியம் மிகுந்த கார உப்பு உருண்டை தயாராகிவிடும்.