சுவையான கோதுமை அடை செய்வது எப்படி?.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.!



How to prepare Wheat adai

எப்போதும் அரிசி மாவில் இட்லி, தோசை என சாப்பிட்டு பழகிப்போனவர்கள் மாறுதலுக்கு கோதுமையில் இவ்வாறான அடை செய்து சாப்பிடலாம்.

கோதுமை அடை செய்யத்தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கிண்ணம், 

ரவை - 4 கரண்டி, 

பச்சரிசி மாவு - 4 கரண்டி,

உப்பு - தேவையான அளவு,

பூண்டு - 8 பற்கள், 

இஞ்சி - சிறிதளவு,

காய்ந்த மிளகாய் - 8,

சீரகம் - 2 கரண்டி, 

கடுகு - 2 கரண்டி,

கடலை பருப்பு - 1 கரண்டி,

வெங்காயம் - 2,

கேரட் - 2,

தக்காளி - 2,

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு. 

கோதுமை அடை

செய்முறை:

எடுத்துக்கொண்ட பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, பச்சரிசி, உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். 

மிக்சியில் பூண்டு, ஜீரகம், இஞ்சி, காய்ந்த மிளகுக்காய் சேர்த்து அரைத்து மாவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனை அப்படியே 10 நிமிடம் வைக்க வேண்டுமாம்.

கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, கடலை பருப்பு, வெங்காயம், தக்காளி, கேரட் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும். இவை வதங்கியதும் கொத்தமல்லி தழைசேர்த்து இறக்கி, ஊறவைத்த கோதுமை மாவோடு சேர்ந்து தோசை கல்லை வைத்து அடையை சுட்டு எடுக்கலாம்.